Pages

Friday, 16 January 2026

'Kathampath Thaen’ Tamil book released

 


G. Valarmathi, who works as an English graduate teacher at the Government Model Higher Secondary School in Regunathapuram, Ramanathapuram district. She has authored a book titled 'Kathampath Thaen: Varalaarum Vaazhviyalum', It contains 25 articles on topics such as self-confidence, teaching experiences, history, archaeology, poetry, nature, environment, and life. The book was released by the Minister for Finance, Environment and Archaeology, Thangam Thennarasu, in Mallankinaru, Virudhunagar district, and was received by S. Santhalingam, former Assistant Director of the Tamil Nadu Department of Archaeology and Secretary of the Pandyanadu centre for Historical Research. The Minister praised the author, Valarmathi, for writing a book that would be beneficial for school and college students, teachers, and the general public. V. Rajaguru, President of the Ramanathapuram Archaeological Research Foundation, Noorsahipuram Sivakumar also participated in the event.



‘வாசிப்பு அனுபவம் புத்தகம் எழுத வைத்தது’ அரசுப்பள்ளி ஆசிரியர் எழுதிய கதம்பத்தேன் நூல் வெளியீடு


 





     ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் க.வளர்மதி. இவர் தன்னம்பிக்கை, ஆசிரியர் பணி அனுபவம், வரலாறு, தொல்லியல், கவிதைகள், இயற்கை, சுற்றுச்சூழல், வாழ்வியல் போன்ற தலைப்புகளில் 25 கட்டுரைகளைக் கொண்ட ‘கதம்பத்தேன் வரலாறும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்நூலை, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் வைத்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான  சொ.சாந்தலிங்கம் பெற்றுக் கொண்டார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் படித்துப் பயன்பெறும்வகையில் புத்தகம் எழுதிய ஆசிரியர் வளர்மதிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், கல்வெட்டு ஆய்வாளர் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

          புத்தகம் எழுதிய அனுபவம் பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர் க.வளர்மதி கூறியதாவது,

ஒரு எழுத்தாளனின் வாழ்வில் முதல் புத்தகம் என்பது ஒரு மைல்கல். அது வெறும் காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. பல ஆண்டு கனவுகளின் உருவம். அதற்கு நீரூற்றிய நிகழ்வு, ஆறாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு விடுமுறையில் நடந்தது. அந்த கோடை விடுமுறையில், குழந்தைகள் புத்தக வாசிப்பை மேற்கொள்வதற்காக, சித்தார்கோட்டை வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகம், எங்கள் வீட்டுத்திண்ணையில் அமைத்திருந்த சிறிய நூலகம், என் வாசிப்பு உலகை மாற்றியது.

ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு மாணவர்களுக்கு கல்வியை எளிமையாகவும், சுவாரசியமாகவும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருந்தது. குறிப்பாக மனச்சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு,  தன்னம்பிக்கையை ஊட்டும் கதைகள் சொல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தேன். நேர்மறை எண்ணங்கள் ஒரு மனிதனை எவ்வாறு நேர்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழவைக்கும் என்பதை பல்வேறு உதாரண கதைகள் மூலம் அவர்களுக்கு உணர்த்தினேன். வழிபாட்டுக்கு கோயிலுக்குச் சென்றபோது என்னைக் கவர்ந்த கட்டட அமைப்புகள், சிற்பங்கள் கட்டுரைகளாயின.



பள்ளிப் பணி, வீட்டுப் பணி முடித்தபின், இரவு நேரங்களில்  சிறு சிறு ஆக்கங்களை எழுதினேன். வாசிப்பு எனக்கு அளித்த ஆழ்ந்த அனுபவங்களை, வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்களை, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எண்ணங்களை, ஒரு சேரத் தொகுத்து அதை ஒரு நூலாக கொண்டு வந்துள்ளேன். இது வெறும் புத்தகம் அல்ல. என் வாழ்வின் கனவு. இப்புத்தகம் பலரது வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சத்தையாவது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட ஒரு படைப்பு. நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியும் கூட. இவ்வாறு அவர் கூறினார்.

மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு

https://www.facebook.com/share/p/1Sis3QXoje/

வரலாற்றில் அறுநூற்றுமங்கலம்

 வணிகரின் பாதுகாவல் படை வீரர்கள் அறுநூற்றுவர் தங்கள் பெயரில் உருவாக்கிய ஊர் அறுநூற்றுமங்கலம். இவ்வூர் இராமநாதபுர மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ளது. மேலும் அறிய படியுங்கள் தினகரன், மதுரை பதிப்பு 'பழமை காப்போம்' பகுதியில்... 13.01.2026.

The village of Arunutrumangalam was established by the 'Arunootruvar' (six hundred soldiers) of a merchant guild's guard. This village is located near R.S. Mangalam in Ramanathapuram district, Tamil Nadu. Read more in the 'Let's Preserve Our Heritage' section of Dinakaran, Madurai Edition. Date: 13.01.2026.


Wednesday, 7 January 2026

Plea to protect ancient brick temple, granary of Pananchayal

 

    The Ramanathapuram Archaeological Research Foundation has requested the preservation of the ancient brick temple and paddy granary at Pananchayal near Thondi in Ramanathapuram district. Regarding this, V. Rajaguru, the Founder of Ramanathapuram Archaeological Research Foundation, said,

          There is a very small temple in Pananchayal, built entirely of bricks. It is in the Pandya period architectural style and has a very small sanctum,  Arthamandapa. There is a dome above the sanctum. There are 3 lamp niches. Three devakottas and 14 semi-pillars are built on its outer wall. The pillars have elements such as the Bodhika, Veerakanda, Paala, and Kudam, which are made of bricks. The Bodhika of the semi-pillars is cut Bodhika. A small standing sculpture may have been in the sanctum. It may have been built in the 12th-13th century AD.

          Black and red potsherds, iron slags, hopscotch, and grinding stones are scattered around a pond in the south kudiyiruppu of the village. These are broken shards of black and red vases, tumblers, and small pots that are 2,000 years old.


          A paddy granary from the Sethupathi period is hidden in the Karuvai trees to the south of this pond. It is built entirely of bricks and has a lime coating on top. The rectangular granary is divided into three rooms by walls in the middle. It faces east and has three gates. There are five small windows on the top of the walls, 3 in the west, 3 in the east, and one each in the south and north. The roof has collapsed. A floor made of black stones was built two feet above the ground and paddy was poured on it. There is a void between the ground and the black stone floor. Due to this, the moisture of the ground does not affect the paddy. Retaining walls have been built to prevent cracks from forming in the walls due to the paddy being placed in it. It has been damaged due to garbage being dumped in front of the granary and the dense Karuvai trees. It may be about 300 years old.

          A platform has been set up near the bus stand and a linga and Vinayaga sculptures are being worshipped as a temple. There may have been a Shiva temple here during the later Chola rule, he said.

NEWS




 


பனஞ்சாயல் செங்கல் கோயில், நெற்களஞ்சியம் பாதுகாக்க கோரிக்கை

 

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகில் பனஞ்சாயலில் உள்ள செங்கல் கோயில், நெற்களஞ்சியத்தை பாதுகாக்க இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,

பனஞ்சாயலில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு மிகச் சிறிய கோயில் உள்ளது. பாண்டியர் கால கலை அமைப்பில் உள்ள இது மிகச் சிறிய கருவறை, அர்த்தமண்டபம் என்ற அமைப்பில் உள்ளது. கருவறை மேல் குவிந்த மாடம் உள்ளது. விளக்கேற்ற 3 மாடக்குழிகள் உள்ளன. இதன் வெளிப்புறச் சுவரில் மூன்று தேவகோட்டங்களும், 14 அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் போதிகை, வீரகண்டம், பலகை, குடம் உள்ளிட்ட உறுப்புகள் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. அரைத்தூண்களின் போதிகை வெட்டுப் போதிகையாக உள்ளது. நின்றநிலையிலான சிறிய சிற்பம் கருவறையில் இருந்திருக்கலாம். இது கி.பி.12-13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.


தெற்குக் குடியிருப்பில் உள்ள ஒரு குளத்தைச் சுற்றிலும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கசடுகள், வட்டச்சில்லுகள், தேய்ப்புக் கல் ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. கருப்பு சிவப்பு நிறமுடைய குவளைகள், டம்ளர் மற்றும் சிறிய பானைகளின் உடைந்த ஓடுகளான இவை 2000 ஆண்டுகள் பழமையானவை.



சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த ஒரு நெற்களஞ்சியம் இக்குளத்தின் தெற்கில் கருவை மரங்களுக்குள் மறைந்து காணப்படுகிறது. முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டுள்ளது. செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சியத்தின் நடுவில் சுவர்கள் கட்டி மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இதில் மூன்று வாயில்கள் உள்ளன. சுவர்களின் மேற்பகுதியில் மேற்கில் 3, கிழக்கில் 3, தெற்கு, வடக்கில் தலா ஒன்றுமாக சிறியதாக ஐந்து ஜன்னல்கள் உள்ளன. மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. தரையில் இருந்து இரண்டு அடி உயரத்துக்கு கருங்கற்களால் தரைதளம் அமைத்து அதன்மேல் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. தரைக்கும் கருங்கல் தளத்துக்கும் இடையே வெற்றிடம் உள்ளது. இதனால் தரையின் ஈரம் நெல்லை பாதிக்காது. நெல் போட்டு வைப்பதால் இதன் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு விடாதபடி அதற்கு முட்டுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. களஞ்சியத்தின் முன் குப்பைகள் போடப்பட்டுள்ளதாலும் கருவை மரங்கள் அடர்ந்துள்ளதாலும் சேதமடைந்துள்ளது.  இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

பேருந்து நிறுத்தம் அருகில் மேடை அமைத்து வட்டவடிவ ஆவுடையுடன் லிங்கம், விநாயகர் சிற்பங்கள் கோயிலாக வழிபடப்படுகிறது. பிற்காலச்சோழர் ஆட்சியின் போது இங்கு ஒரு சிவன் கோயில் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்